

ஆண்டனி டிசோஸா இயக்கத்தில் இம்ரான் ஹாஸ்மி நடிக்கவிருக்கும் படத்தில் சாண்ட்ரா ஏமி முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
பல்வேறு டி.வி ஷோக்கள் மற்றும் படங்களில் சிறு வேடத்தில் நடித்தவர் சாண்ட்ரா ஏமி. தற்போது 'சிவப்பு எனக்கு பிடிக்கும்' என்னும் படத்தில் நாயகியாக நடித்து இருக்கிறார். இத்திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இவரது புகைப்படங்கள் இணையத்தில் பார்த்து இவருக்கு பாலிவுட் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 'ப்ளூ', 'பாஸ்' உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆண்டனி டிசோஸா அடுத்ததாக இம்ரான் ஹாஸ்மியை நாயகனாக வைத்து படம் ஒன்றை இயக்க திட்டமிட்டு இருக்கிறார்.
இப்படத்தில் ஷமீரா ரெட்டி நாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார். இதில் சாண்ட்ரா ஏமி, இம்ரான் ஹாஸ்மிக்கு இன்னொரு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.
இம்ரான் ஹாஸ்மி என்றாலே பாலிவுட்டில் முத்தக்காட்சிகள் தான் பிரபலம். இப்படத்தில் இம்ரான் மற்றும் சாண்ட்ராவிற்கு முத்தக் காட்சி இருக்கிறது. காட்சிக்கு தேவை என்பதால் ஒ.கே சொல்லிவிட்டேன் என்று கூலாக கூறியிருக்கிறார் சாண்ட்ரா.