‘வாடிவாசல்’ படத்துக்காக ரோபோ காளை: இயக்குநர் வெற்றிமாறன் பகிர்வு

‘வாடிவாசல்’ படத்துக்காக ரோபோ காளை: இயக்குநர் வெற்றிமாறன் பகிர்வு
Updated on
1 min read

சென்னை: சூர்யா நடிக்க இருக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படத்துக்காக ரோபோ காளை ஒன்றை உருவாக்கி வருவதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படம் 'வாடிவாசல்'. ஏறு தழுவுதலை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தை தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். நீண்ட நாட்களாக முன்தயாரிப்புப் பணிகளில் இருக்கும் இப்படம் ‘விடுதலை 2’ ரிலீஸுக்குப் பிறகு தொடங்க இருப்பதாக வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இப்படம் குறித்து நேற்று (ஜூன் 25) நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வெற்றிமாறன் பேசியுள்ளார். அதில் அவர் பேசும்போது, “‘வாடிவாசல்’ படத்தின் முன்தயாரிப்பு பணிகள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன. லண்டனில் அனிமேட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்தின் மூலம் ரோபோ காளை ஒன்றை உருவாகி வருகிறோம். சூர்யா வளர்க்கும் மாட்டை ஸ்கேன் செய்து அதே போன்ற ஒரு ரோபோ காளை உருவாகிக் கொண்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in