23 மணி நேரத்தில் படம் இயக்கி சாதனை

23 மணி நேரத்தில் படம் இயக்கி சாதனை
Updated on
1 min read

சென்னை: ‘பிதா’ என்ற படத்தை 23.23 மணி நேரத்தில் இயக்கிய சுகன் குமார், இப்போது ‘கலைஞர் நகர்’ என்ற படத்தை 22.53 மணி நேரத்தில் படமாக்கி சாதனைப் படைத்துள்ளார். இதில் பிரஜன், பிரியங்கா, லிவிங்ஸ்டன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இதுபற்றி சுகன் குமார் கூறும்போது, “இது முழுக்க மேடை நடனக் கலைஞர்களை மையப்படுத்திய படம். அதனால் ‘கலைஞர் நகர்’ என தலைப்பு வைத்துள்ளோம். 5 கேமராவை பயன்படுத்தினோம். 23 மணிநேரத்துக்குள் படத்தை எடுத்ததற்கு நான் மட்டும் காரணம் இல்லை. என் கடைசி உதவியாளர் வரை உழைத்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் இளையராஜா, எடிட்டர் சந்தீப், இசையமைப்பாளர் நரேஷ், நடிகர்கள் அனைவரும் சிறப்பாகச் செயல்பட்டனர். அவர்களால்தான் இது சாத்தியமானது. 3 பாடல்கள், 2 சண்டைக் காட்சிகளையும் படமாக்கியுள்ளோம். முதல் நாள் 2.30 மணிக்கு படப்பிடிப்பைத் தொடங்கி மறுநாள் 1.23 மணிக்கு முடித்தோம்” என்று தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in