

மும்பை: சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு’படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சித்தி இட்னானி. பின்னர் ஆர்யாவுடன் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்தில் நடித்திருந்தார்.
இவர் மும்பையில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பள்ளிக்குச் சென்று பரிசுகள் வழங்கிய புகைப்படங்களைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ‘‘நீங்கள் ஒருவருக்கு பரிசளிக்கக்கூடிய சிறந்த விஷயம், உங்கள் நேரம். லிட்டில் ஏஞ்சல்ஸில் உள்ள மனநலம் குன்றிய குழந்தைகளுடன் மதிய நேரத்தை செலவிட்டேன். அவர்கள் முகத்தில் இருக்கும் புன்னகை விலைமதிப்பில்லாதது’’ என்று பதிவிட்டுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் அவரைப் பாராட்டியுள்ளனர்.