Published : 22 Jun 2023 08:15 AM
Last Updated : 22 Jun 2023 08:15 AM
பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர், திலீப்பை விவாகரத்து செய்த பின் நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மலையாள சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக இருக்கும் இவர், வெற்றிமாறன் இயக்கிய ‘அசுரன்’ படம் மூலம் தமிழுக்கு வந்தார். இதில் பச்சையம்மாள் என்ற கதாபாத்திரத்தில் கிராமத்துப் பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார். அடுத்து அஜித் ஜோடியாக ‘துணிவு’படத்தில் மாடர்ன் பெண்ணாக நடித்திருந்தார்.
இப்போது மீண்டும் தமிழ்ப் படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். ‘எஃப்.ஐ.ஆர்’படத்தை இயக்கிய மனு ஆனந்த், அடுத்து ‘மிஸ்டர் எக்ஸ்’ என்ற த்ரில்லர் படத்தை இயக்குகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லஷ்மன் குமார் தயாரிக்கும் இதில் ஆர்யா நாயகனாக நடிக்கிறார். கவுதம் கார்த்திக் வில்லனாக நடிக்கிறார். நாயகியாக அனகா நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் மஞ்சு வாரியர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இதன் ஆக்ஷன் காட்சிகள் அஜர்பைஜான், ஜார்ஜியா நாடுகளில் படமாக்கப்படுகிறது. திபு நிபுணன் தாமஸ் இசை அமைக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT