

சென்னை: ‘துப்பறிவாளன்', 'இரும்புத்திரை', 'அண்ணாத்த', 'டைரி', 'நட்பே துணை' படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் ரஞ்சனா நாச்சியார். இவர், இயக்குநர் பாலாவின் அண்ணன் மகள். ஸ்டார் குரு ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி ஒரே நேரத்தில் 2 படங்களை இவர், தயாரித்து வருகிறார். ஒரு படத்தை சரவண சக்தியும் மற்றொரு படத்தை சங்கர பாண்டியனும் இயக்குகின்றனர்.
இதுபற்றி ரஞ்சனா கூறும்போது, “நடிகையாக நல்ல இடத்தைப் பிடித்துள்ள நான், அடுத்து படம் இயக்க முடிவு செய்துள்ளேன். முதற்கட்டமாக படங்களைத் தயாரித்து அதுபற்றிய நுணுக்கங்களை அறிந்து கொள்ள தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இருக்கிறேன்” என்றார்.