சிம்பு, யோகிபாபு, அதர்வா உட்பட 5 நடிகர்கள் மீது நடவடிக்கை

சிம்பு, யோகிபாபு, அதர்வா உட்பட 5 நடிகர்கள் மீது நடவடிக்கை
Updated on
1 min read

சென்னை: தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில், பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. முக்கியமாக, தயாரிப்பாளர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு படப்பிடிப்பு மற்றும் டப்பிங் வேலைகளில் தொடர்ந்து பிரச்சினை செய்து வரும் 5 நடிகர்கள் மீது நடிகர் சங்கத்துடன் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர்கள் சங்கத்தைத் தொடர்பு கொண்ட பிறகுதான் அவர்களை படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் அந்த நடிகர்களின் பெயர்களை அவர்கள் அறிவிக்கவில்லை. இதுபற்றி விசாரித்தபோது, நடிகர் சிம்பு, அதர்வா, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, குணசித்திர நடிகர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in