‘பெண்தானே...’ - காஜல் அகர்வால் ஆக்‌ஷனில் மிரட்டும் ‘சத்யபாமா’ டைட்டில் கிளிம்ஸ்

‘பெண்தானே...’ - காஜல் அகர்வால் ஆக்‌ஷனில் மிரட்டும் ‘சத்யபாமா’ டைட்டில் கிளிம்ஸ்
Updated on
1 min read

நடிகை காஜல் அகர்வாலின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் ‘சத்யபாமா’ படத்தின் டைட்டில் கிளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.

இயக்குநர் சங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். இந்தப் படத்துக்குப் பிறகு காஜல் அகர்வால் சினிமாவிலிருந்து வெளியேறுகிறார் என தகவல்கள் வெளியான நிலையில், அவர் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. ‘சத்யபாமா’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை அகில் தெகலா இயக்குகிறார். ஸ்ரீ சரண் படத்துக்கு இசையமைக்கிறார். இந்நிலையில் காஜல் அகர்வாலின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் டைட்டில் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.

வீடியோ எப்படி? - காஜல் அகர்வால் கதாபாத்திரத்தை முன்னிலைப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில் அவர் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். தெலுங்கு ஹீரோ ஒருவருக்கு கொடுக்கப்படும் பில்டப்புக்கு இணையாக காஜலுக்கு இன்ட்ரோ கொடுக்கப்படுகிறது. சேலையுடன் கையில் வளையல் அணிந்து வரும் காஜல், ‘பெண் தானே சாஃப்டா இருப்பான்னு நெனைக்காதீங்க; நான் ரக்கடான ஆளு’ என்பதற்கு ஏற்ப சிறையிலிருக்கும் கைதியின் முகத்தில் குத்த குருதி கையில் ஒட்டிகொள்கிறது. அதேவேகத்தில் கையெழுத்திட இறுதியில் பேப்பரில் ரத்தம் ஒட்டிக்கொள்கிறது. வீடியோவின் கடைசியில் சின்ன ட்விஸ்டும் இருக்கிறது. காஜல் ரசிகர்களுக்கு ஃபுல்மில்ஸ் ரெடியாகி வருவதை வீடியோ உணர்த்துகிறது. வீடியோவைக் காண:

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in