“எல்சியுவில் 10 படங்கள்” - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பகிர்வு

“எல்சியுவில் 10 படங்கள்” - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பகிர்வு
Updated on
1 min read

சென்னை: “எல்சியுவில் 10 படங்கள் எடுத்துவிட்டு, அதிலிருந்து வெளியேறிவிடுவேன்” என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அண்மையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், “நிறைய படங்கள் பண்ண வேண்டும். நீண்ட நாட்கள் இந்த இடத்தில் இருக்க வேண்டும் என்ற எந்தத் திட்டமும் இல்லை. நான் தற்போது இந்த யூனிவர்ஸ் முயற்சித்ததற்கு நடிகர்கள், தயாரிப்பாளரகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். காரணம், அது அவ்வளவு எளிதாக நடந்துவிடாது. என்ஓசி வாங்க வேண்டும் என நிறைய குழப்பங்கள் உண்டு.

ஆக இந்த யூனிவர்ஸுக்கு கிடைக்கும் வரவேற்புக்கு நியாயம் சேர்க்க வேண்டும் என நினைக்கிறேன். எல்சியு-வில் 10 படங்கள் இயக்கிவிட்டு அதிலிருந்து வெளியேறிவிடுவேன்” என தெரிவித்துள்ளார்.

மேலும்,“லியோ படத்தில் விஜய்யுடன் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னும் 10 நாட்களில் விஜய் உடனான படப்பிடிப்பு நிறைவடைய உள்ளது. மற்ற நடிகர்களுடன் படப்பிடிப்பு இருக்கிறது. விஜய்யை மிஸ் செய்வது கஷ்டமாகத்தான் இருக்கிறது. எல்சியு-வுக்கு கீழ் ‘லியோ’ வருமா என்பதை அறிய இன்னும் 3 மாதங்கள் காத்திருங்கள்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in