திருட்டுப்பயலே 2 நவம்பரில் வெளியாகும்: படக்குழு தகவல்

திருட்டுப்பயலே 2 நவம்பரில் வெளியாகும்: படக்குழு தகவல்

Published on

சுசிகணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'திருட்டுப்பயலே - 2' நவம்பர் முதல் வாரத்தில் வெளியாகும் என படக்குழு தகவல்

'திருட்டுப்பயலே 2' படத்தின் இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பல்வேறு படங்களின் வெளியீட்டால் இப்படம் செப்டம்பர் வெளியீட்டிலிருந்து பின்வாங்கியது. தற்போது 'நவம்பர் முதல் வாரத்தில் 'திருட்டுப்பயலே 2' வெளியாகும்' என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலா பால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் 'திருட்டுப்பயலே - 2'. சுசி கணேசன் இயக்கத்தில் உருவான இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டது.

ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் சென்னையிலே முடித்து தற்போது இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வித்யாசாகர் இசையமைத்துள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீஸருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in