கார்த்தியின் ஜப்பான் படத்துக்கு பிரம்மாண்ட கிராமம் செட்

கார்த்தியின் ஜப்பான் படத்துக்கு பிரம்மாண்ட கிராமம் செட்
Updated on
1 min read

கார்த்தியின் 25-ஆவது படம் ‘ஜப்பான்’. ராஜு முருகன் இயக்கும் இந்தப் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கிறது. அனு இமானுவேல் நாயகியாக நடிக்கிறார்.

தெலுங்கு நடிகர் சுனில், இயக்குநர் விஜய் மில்டன் உட்பட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.

இந்தப் படத்துக்காக சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் பிரம்மாண்டமான கிராமம் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. 24-ம் தேதி முழு படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் என்றும் பிறகு 2 பாடல் காட்சிகள் மட்டும் படமாக்கப்பட இருப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in