

சென்னை: நடிகர் தனுஷ், ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். இதை ‘சாணிக்காயிதம்’, ‘ராக்கி’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். பீரியட் படமாக உருவாகும் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இதில் பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடிக்கிறார். நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் உட்பட பலர் நடிக்கின்றனர். தனுஷின் பிறந்த நாளான ஜூன் 28-ம் தேதி படத்தின் அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதற்கிடையே இந்தப் படம் 3 பாகங்களாக உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. முதல்பாகத்தின் கதை 1940-களில்நடப்பது போலவும் இரண்டாம் பாகம் 1990 களில் நடப்பது போலவும் அடுத்த பாகம் இப்போது நடப்பது போலவும் உருவாக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.