விஜய் பிறந்தநாள் ட்ரீட் - ஜூன் 22-ல் ‘லியோ’ சிங்கிள் பாடல் ரிலீஸ்

விஜய் பிறந்தநாள் ட்ரீட் - ஜூன் 22-ல் ‘லியோ’ சிங்கிள் பாடல் ரிலீஸ்
Updated on
1 min read

நடிகர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி ஜூன் 22-ல் தேதி ‘லியோ’ படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘நா ரெடி’ பாடல் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வரும் படம் ‘லியோ’. கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் நிறைவடைந்துவிட்டன.

இப்போது பாடல் காட்சி ஒன்று பிரம்மாண்டமான செட் அமைத்து படமாக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இறுதிக்கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடக்க இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘நா ரெடி’ பாடல் நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 22-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படம் வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in