ஆதரவற்ற நிலையில் இறந்த துணை நடிகர் - முன்னின்று இறுதிச் சடங்குகளை செய்த டி.இமான்

ஆதரவற்ற நிலையில் இறந்த துணை நடிகர் - முன்னின்று இறுதிச் சடங்குகளை செய்த டி.இமான்
Updated on
1 min read

சென்னை: புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் காலமான துணை நடிகர் பிரபுவின் உடலுக்கு இசையமைப்பாளர் டி.இமான் முன்னின்று இறுதிச் சடங்குகளை செய்தார்.

தமிழ் சினிமாவில் துணை நடிகராக இருந்தவர் பிரபு. தனுஷ் நடித்த ‘படிக்காதவன்' உள்ளிட்ட நூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு பிரபுவுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. மருத்துவ சிகிச்சைக்கு போதிய வசதி இல்லாததால் சிரமப்பட்டு வந்த இவருக்கு இசையமைப்பாளர் டி.இமான் அவ்வப்போது பொருளாதார உதவிகள் செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று (ஜூன் 15) பிரபு சிகிச்சை பலனின்றி காலாமானார். உறவினர்கள் யாருமின்றி ஆதரவற்ற நிலையில் இருந்த அவரது உடலுக்கு இசையமைப்பாளர் டி.இமான் நேரில் சென்று இறுதிச் சடங்குகளை செய்தார். மேலும் அவரது உடல் தகனத்தின்போது தன் கையால் கொள்ளி வைத்தார். டி.இமானின் இந்தச் செயலை நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in