தமிழ் சினிமா
ஜூலை முதல் வாரம் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு நிறைவு
சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவரும் படம், ‘இந்தியன் 2’. பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா உட்பட பலர் நடிக்கின்றனர். லைகா, ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
இதன் முக்கியமான காட்சிகள் தைவானின் தைபே, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரங்களில் படமாக்கப்பட்டுள்ளன. இப்போது சென்னையில் அமைக்கப்பட்டுள்ள செட்டில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அடுத்த மாதம், முதல் வாரத்துடன் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு முழுமையாக முடிவடைகிறது. சில முக்கிய காட்சிக்காக மட்டும் ஜூலை 2 வது வாரம் ஷங்கர், கமல் உள்ளிட்ட படக்குழுவினர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு செல்கின்றனர்.
