மீண்டும் த்ரில்லர் கதை - ‘போர் தொழில்’ இயக்குநர் முடிவு

மீண்டும் த்ரில்லர் கதை - ‘போர் தொழில்’ இயக்குநர் முடிவு
Updated on
1 min read

சரத்குமார், அசோக் செல்வன் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படம் ‘போர் தொழில்’. நிகிலா விமல், சரத் பாபு உட்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அப்ளாஸ் என்டர் டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார். ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் படத்தின் தியேட்டர் எண்ணிக்கை சில பகுதிகளில் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தப்படத்தின் வெற்றி பற்றி இயக்குநர் விக்னேஷ் ராஜாவிடம் கேட்டபோது, “‘போர் தொழில்’ கண்டிப்பாகச் சிறந்த படமாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், இப்படியொரு வரவேற்பை எதிர்பார்க்கவில்லை. மீடியாவும் படத்தைக் கொண்டாடி இருக்கிறது. படம் பார்த்துவிட்டு பல திரையுலக பிரபலங்கள் பேசினார்கள். இந்தப் படத்தின் வெற்றி எனக்கு கூடுதல் பொறுப்பை கொடுத்திருக்கிறது. அடுத்தும் த்ரில்லர் படத்தை இயக்க இருக்கிறேன். அதுவும் புதுமையான கதையாக இருக்கும்” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in