பிரபல வில்லன் நடிகர் கசான் கான் மாரடைப்பால் காலமானார்

பிரபல வில்லன் நடிகர் கசான் கான் மாரடைப்பால் காலமானார்
Updated on
1 min read

கொச்சி: பிரபல வில்லன் நடிகர் கசான் கான் மாரடைப்பு காரணமாக காலமானார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மலையாள சினிமா தயாரிப்பாளர் என்எம்.பாதுஷா கசான் கான் உயிரிழப்பை உறுதிசெய்துள்ளார். சில நாட்கள் முன்பே இவர் உயிரிழந்துவிட்டார் என்றும், இப்போதுதான் அவரின் உயிரிழப்பு குறித்த தகவல் தெரியவந்ததுள்ளது என்றும் சொல்லப்படுகிறது. எனினும், அவரின் உயிரிழப்பு குறித்து கூடுதல் தகவல் ஏதும் இல்லை.

கேரளாவை பூர்வீகமாக கசான் கான், தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர். 1992ல் வெளிவந்த செந்தமிழ்பாட்டு என்ற படத்தின்மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து மலையாள சினிமாவிலும் நடிகராக வலம்வந்தார்.

பெரும்பாலும் இவர் ஏற்றுநடித்த வேடங்கள், வில்லன் வேடம்தான். சேதுபதி ஐபிஎஸ், மேட்டுக்குடி, வானத்தைப் போல, வல்லரசு, முறைமாமன் என 1990களில் வெளிவந்த முக்கிய படங்களில் இவர் நடித்துள்ளார்.

1993ல் வெளியான கந்தர்வம் படத்தின் மூலம் மலையாள சினிமா உலகில் அறிமுகமான இவர், வர்ணபகிட்டு, தி கிங், தி டான், மாயாமோகினி, ராஜாதிராஜா, மரியாதா ராமன், லைலா ஓ லைலா உள்ளிட்ட மலையாள படங்களில் நடித்துள்ளார்.

2003ல் மலையாளத்தில் வெளிவந்த 'சிஐடி மூசா' படத்தில் கசான் கான் வில்லனாக நடித்தது நல்ல வரவேற்பைப் பெற்றது. தென்னிந்திய திரையுலகில் 13 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய நடிகராக வலம்வந்த கசான் கான் கடைசியாக 2015ல் லைலா ஓ லைலா என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in