Published : 12 Jun 2023 11:26 PM
Last Updated : 12 Jun 2023 11:26 PM

நெல் பாதுகாப்பு மைய நிர்வாகிகள் கூட்டத்தில் கமலுடன் ஹெச்.வினோத்

‘நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம்’ அமைப்பின் நிர்வாகிகள் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து பேசினர். அப்போது இயக்குநர் ஹெச்.வினோத்தும் அவருடன் இருந்தார்.

அப்போது நிர்வாகிகளிடம் பேசிய கமல்ஹாசன், “திருகியெழுதப்பட்ட புனை வரலாற்றிலிருந்து, நமது உண்மையான வரலாற்றை மீட்டெடுப்பதுதான் இன்றைய அரசியல். தமிழர்களின் மரபிலும் பண்பாட்டிலும் வரலாற்றிலும் நமது வேளாண்மைக்கும், உணவுப் பழக்கத்திற்கும் மறுக்கமுடியாத இடம் உண்டு. வரலாற்றை மீட்டெடுப்பது போலவே நமது பாரம்பரிய வேளாண்மையையும், தானியங்களையும், நீர்நிலைகளையும் மீட்டெடுத்தே ஆகவேண்டும்.

ஒரு பொறுப்புள்ள குடிமகனாக இதுவும் எனது கடமை என்றே நினைக்கிறேன். கைவிடப்பட்ட ஊர்க்கிணறுகளை மீட்டெடுக்கும் ‘ஊர்க்கிணறு புனரமைப்பு இயக்கம்’ பற்றி சமீபத்தில் கேள்விப்பட்டேன். உடனடியாக எனது ஆதரவையும், பங்களிப்பையும் அவர்களுக்கு நல்கினேன். பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாக்கவும், பரவலாக்கம் செய்வதற்கும் நீங்கள் செய்யும் முயற்சிகள் அனைத்தும் முக்கியமானவை . என்னால் ஆன அனைத்து உதவிகளையும் செய்வேன்” என்றார்.

இந்த சந்திப்பின்போது இயக்குநர் ஹெச்.வினோத் உடனிருந்தார். ‘விக்ரம்’ படத்துக்குப் பிறகு கமல் நடிக்கும் புதிய படத்தை ஹெச்.வினோத் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்தப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதனிடையே இந்த கூட்டத்தில் ஹெச்.வினோத் கலந்துகொண்டதையடுத்து விரைவில் கமல் - ஹெச்.வினோத் படம் தொடங்கும் என கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x