வெற்றிமாறனின் உதவி இயக்குநர் சாலை விபத்தில் உயிரிழப்பு

சரண் ராஜ்
சரண் ராஜ்
Updated on
1 min read

சென்னை: இயக்குநர் வெற்றிமாறனின் உதவி இயக்குநரும், உறுதுணை நடிகருமான சரண் ராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 29.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். அவரது இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘வட சென்னை’. இந்தப் படத்தில் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் சரண் ராஜ். உதவி இயக்குநராக மட்டுமல்லாமல், ‘வட சென்னை’, ‘அசுரன்’ படங்களில் உறுதுணை நடிகராகவும் நடித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு 11.30 மணி அளவில் கே.கே.நகர் ஆற்காடு சாலையில் சென்றுகொண்டிருந்த சரண் ராஜின் இருசக்கர வாகனத்தின் மீது மற்றொரு துணை நடிகரான பழனியப்பனின் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே சரண் ராஜ் பலியானார். இது தொடர்பான விசாரணையில் காரை ஓட்டி வந்த பழனியப்பன் மது அருந்தியிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, பழனியப்பனை கைது செய்துள்ள காவல் துறையினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in