மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது ‘வேட்டையாடு விளையாடு’

மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது ‘வேட்டையாடு விளையாடு’
Updated on
1 min read

சென்னை: கவுதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து பெரும் வெற்றி பெற்ற ‘வேட்டையாடு விளையாடு’ திரைப்படம் ரீமாஸ்டர் செய்யப்பட்டு மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

2006-ஆம் ஆண்டு கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான படம் ‘வேட்டையாடு விளையாடு’. கமல்ஹாசன் ஹீரோவாக நடித்த இப்படத்தில் ஜோதிகா, கமலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்ற இப்படம் கமலின் திரைவாழ்விலும் ஒரு முக்கிய படமாக அமைந்தது. இப்படத்துக்காக தமிழக அரசின் சிறந்த நடிகர் விருது கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இப்படத்தின் பாடல்களும் பெரும் ஹிட்டடித்தன. தமிழ் சினிமாவின் மிக முக்கிய க்ரைம் த்ரில்லர் படங்களில் ஒன்றாக இப்படம் இன்றுவரை கொண்டாடப்படுகிறது. இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘போர் தொழில்’ படத்தின் இன்ஸ்பிரேஷனே ‘வேட்டையாடு விளையாடு’தான் என்று அப்படத்தின் இயக்குநர் பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.

தற்போது ‘வேட்டையாடு விளையாடு’ திரைப்படம் ரீமாஸ்டர் செய்யப்பட்டு மீண்டும் திரையரங்களில் வெளியாகவுள்ளது. இப்படம் வரும் ஜூன் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in