

கார்த்திக் - கவுதம் கார்த்திக் இணையும் படத்தின் நாயகியாக ரெஜினா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
திரு இயக்கத்தில் கார்த்திக் மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கவுள்ள படத்தின் நாயகியாக ரெஜினா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இவர்களோடு சதீஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
கவுதம் கார்த்திக் தன் தந்தையுடன் நடிக்கும் முதல் படம் இது. கார்த்திக் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யாவுடன் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து இப்படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தின் தலைப்பை அக்டோபர் 7-ம் தேதி அறிவிக்கவுள்ளார்கள். மேலும், இப்படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களைத் தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் இணையதள மீடியாக்களில் கால் பாதிக்கும் பாஃப்டா மீடியா ஒர்க்ஸ் இந்தியா என்ற புதிய மீடியா நிறுவனத்திற்காக கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது.