

விஷால், சுந்தர்.சி இணைப்பில் தயாரான 'மதகஜராஜா' வெளியாகமால் இருக்கும் நிலையில், இருவரும் 'ஆம்பள' என்ற அடுத்த படத்தை தொடங்கி இருக்கிறார்கள்.
விஷால், அஞ்சலி, வரலெட்சுமி சரத்குமார், சந்தானம் உள்ளிட்ட பலர் நடிக்க சுந்தர்.சி இயக்கிய படம் 'மதகஜராஜா'. ஜெமினி நிறுவனம் தயாரித்த இப்படத்தை வெளியிட முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. விஷால் வாங்கி வெளியிட முடிவு செய்த போதும், 'கடல்' படத்தை வெளியிட்ட போது ஏற்பட்ட பிரச்சினையால் இன்னும் வெளியிட முடியவில்லை.
இந்நிலையில் விஷால், சுந்தர்.சி இருவரும் இணைந்து தங்களது அடுத்த படத்தின் பணிகளை துவங்கி இருக்கிறார்கள். 'ஆம்பள' என்று பெயரிடப்பட்டு இருக்கும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். பிரபு முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். யுவன் இசையமைக்க இருக்கிறார். இப்படத்தினை விஷால் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் பேக்டரி மூலம் தயாரிக்க இருக்கிறார்.