

சென்னை: சிவகார்த்திகேயன் இப்போது ‘மாவீரன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். மடோன் அஸ்வின் இயக்கியுள்ள இந்தப் படம் ஜூலை 14-ல் வெளியாகிறது. இதையடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இதில் சாய்பல்லவி நாயகியாக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இதில் சிவகார்த்திகேயன் ராணுவ மேஜராக நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதன் பெரும்பாலான படப்பிடிப்பு காஷ்மீரில் நடக்கிறது. இதன் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன் காஷ்மீரில் தொடங்கிய நிலையில் ஜி20 மாநாட்டுக்கான பாதுகாப்பு காரணங்களுக்காக படப்பிடிப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் படக்குழுவினர் சென்னைத் திரும்பினர்.
இந்நிலையில் தற்போது படப் பிடிப்புக்கு மீண்டும் அனுமதி கிடைத்துள்ளதால், காஷ்மீர் சென்றுள்ளனர். நேற்று அங்கு படப்பிடிப்பு தொடங்கியது. சிவகார்த்திகேயன் சில நாட்களில் இதில் கலந்து கொள்ள இருக்கிறார்.