

சென்னை: விஜய் சேதுபதி, காயத்ரி சங்கர், குரு சோமசுந்தரம் உட்பட பலர் நடித்த ‘மாமனிதன்’ படத்தை இயக்கி இருந்தார், சீனு ராமசாமி. கடந்த வருடம் ஜூனில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது. சர்வதேசத் திரைப்பட விழாக்களில் மொத்தம் 56 விருதுகளைப் பெற்றுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் மாஸ்கோ சர்வதேசப் பட விழாவில் இந்தப் படம் திரையிடப்பட்டது. மேலும் ரஷ்ய மொழியில் டப் செய்யப்பட்டும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி புதுமுகங்கள் நடிக்கும் 3 படங்களை இயக்க இருக்கிறார். இதுபற்றிய அறிவிப்பு வெளியாக இருக்கிறது.