

பசுபதி நடித்துள்ள ‘தண்டட்டி’ ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. நகைச்சுவை கலந்து சுவாரஸ்யமான காட்சிகளைக் கொண்ட இந்த ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அறிமுக இயக்குநர் ராம் சங்கய்யா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தண்டட்டி’. இந்தப் படத்தை ‘சர்தார்’, ‘ரன் பேபி ரன்’ படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பசுபதி, ரோஹினி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். சாம்.சி.எஸ் பின்னணி இசையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? - தங்கப் பொண்ணு காதுல இருந்த தண்டட்டிய காணோம்டி’ என தொடங்கும் இந்த ட்ரெய்லர் படத்தின் மொத்த கதையும் இந்த ஒற்றை வசனத்தை மையப்படுத்திதான் நகரும் என்பதை உறுதிப்படுத்துகிறது. காணாமல் போன தண்டட்டியை கண்டிபிடிக்கும் காவல் துறை அதிகாரியாக பசுபதி ஒற்றை ஆளாக மாட்டிக்கொண்டு தவிப்பதும், விவேக் பிரசன்னா குடித்துவிட்டு ரகளை செய்வதும் ஈர்ப்பு.
தீபா சங்கர் நடுவில் ஸ்கோர் செய்கிறார். சொற்பமான கதாபாத்திரங்களைக்கொண்டும், ஆர்பாட்டமில்லாத மெல்லிசான கதையை கொண்டும் படம் உருவாகியிருப்பதை ட்ரெய்லரின் காட்சிகள் உணர்துதகின்றன. படம் ஜூன் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ட்ரெய்லர் வீடியோ: