Published : 06 Jun 2023 02:11 AM
Last Updated : 06 Jun 2023 02:11 AM

தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகும் மனோஜ் பாஜ்பாய் திரைப்படம்

மனோஜ் பாஜ்பாய் நடிப்பில், ZEE5 தளத்தின் ஒரிஜினல் திரைப்படமான சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹை ( Sirf Ek Bandaa Kaafi Hai) தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

மிகப்பெரிய கோர்ட் டிராமா திரைப்படமான " சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹை ( Sirf Ek Bandaa Kaafi Hai)" ஜூன் 7 முதல் வெளியாகவுள்ளது. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில், அபூர்வ் சிங் கார்க்கி இயக்கத்தில், கோர்ட் டிரமாவாக உருவாகியுள்ள ‘சிர்ஃப் ஏக் பந்தா காஃபி ஹை’, படத்தில் வழக்கறிஞராக மனோஜ் பாஜ்பாய், பி.சி சோலங்கி எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார். ஜூன் 7 ம் தேதி முதல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடப்படுகிறது.

இதன் ஒரிஜினல் வெர்சன், மே 23 அன்று ZEE5ல் வெளியானது. மிகப்பெரிய வரவேற்புடன் வெளியான இப்படம் வெளியான முதல் வாரம் முழுவதும், பார்வையாளர்களின் எண்ணிக்கையில் மிகப்பெரும் சாதனையைப் படைத்தது. இந்த வருடத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட படம் எனும் சாதனையும் படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் ஜூன் 7ம் தேதி முதல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x