Published : 05 Jun 2023 12:15 PM
Last Updated : 05 Jun 2023 12:15 PM

‘விஜய் 68’ படத்தின் தலைப்பு ‘சிஎஸ்கே’? 

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு ‘சிஎஸ்கே’ என்று தலைப்பு வைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜின் ‘லியோ’ படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் 68-வது படத்தை இயக்குகிறார் வெங்கட் பிரபு. இதனை கடந்த சில தினங்களுக்கு முன்பு படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் - யுவன் கூட்டணி மீண்டும் இப்படத்தில் இணைகிறது.

இந்த நிலையில் இப்படத்துக்கு ‘சிஎஸ்கே’ என்று தலைப்பு வைக்கப்பட இருப்பதாக திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது. வெங்கட் பிரபு - விஜய் இருவருமே சிஎஸ்கே மற்றும் தோனியின் தீவிர ரசிகர்கள் என்பதால் இந்த தலைப்பை படத்துக்கு வைக்க இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

’லியோ’ படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்தபிறகு இப்படத்துக்கான பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x