

சென்னை: மதராசபட்டினம், நண்பன், தாண்டவம், வேலைக்காரன், லிஃப்ட் உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் பாலாஜி வேணுகோபால். இவர் இப்போது ‘பானிபூரி’ என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார். 'லிவ்-இன்' ரிலேஷன்ஷிப்பை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இத்தொடரில் லிங்கா, சம்பிகா, இளங்கோ குமரவேல், கனிகா, வினோத் சாகர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நவ்நீத் சுந்தர் இசையமைத்துள்ளார். பிரவீன் பாலு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஃபுல் ஹவுஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள, 8 எபிசோடுகளை கொண்ட இந்த தொடர் ஷார்ட்ஃபிளிக்ஸ் (Shortflix) தளத்தில் விரைவில் வெளியாக இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு, குடும்பத்தினர் மற்றும் பக்கத்து வீடு காரணமாக ஒரு ஜோடி தங்கள் உறவில் எதிர்கொள்ளும் சவால்களையும் பிரச்சினைகளையும் இந்தக் கதைப் பேசும் என்கிறது ‘பானிபூரி’ குழு.