ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் மீண்டும் தனுஷ்?

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் மீண்டும் தனுஷ்?
Updated on
1 min read

மும்பை: நடிகர் தனுஷ் இப்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து சன் பிக்ர்சஸ் தயாரிக்கும் படத்தை அவர் இயக்கி நடிக்க இருக்கிறார். சமீபத்தில் அவர் மும்பை சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாயின. அவர் இந்திப் படத்தில் மீண்டும் நடிக்க இருப்பதாகவும் அதற்கான லுக் டெஸ்ட்டுக்காகவே அவர் அங்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது. நடிகர் தனுஷ், ஆனந்த் எல்.ராய் இயக்கிய, ‘ராஞ்சனா’ படம் மூலம் இந்தியில் அறிமுகமானார். பின் அமிதாப்பச்சனுடன் ‘ஷமிதாப்’, ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ‘அட்ரங்கி ரே’ படங்களில் நடித்திருந்தார். இப்போது ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் மீண்டும் நடிக்கப் போவதாகக் கூறப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in