தமிழில் ரீமேக் ஆகிறது கார்த்திக் ஆர்யனின் இந்தி படம்

தமிழில் ரீமேக் ஆகிறது கார்த்திக் ஆர்யனின் இந்தி படம்
Updated on
1 min read

சென்னை: கார்த்திக் ஆர்யன், கியாரா அத்வானி, தபு உட்பட பலர் நடித்து கடந்த வருடம் வெளியான இந்தி படம், ‘பூல் புலையா 2’ (Bhool Bhulaiyaa 2). அனீஸ் பாஸ்மி இயக்கியிருந்த இந்தப் படத்தை பூஷன் குமார் தயாரித்திருந்தார். இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் இந்தப் படம் தமிழில் ரீமேக் ஆகிறது. இதன் ரீமேக் உரிமையை வாங்க பல தயாரிப்பாளர்கள் போட்டியிட்டனர்.

இந்நிலையில் ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா இதன் தென்னிந்திய ரீமேக் உரிமையை பெற்றுள்ளார். அவர் கூறும்போது, “இதன் ரீமேக் உரிமையை பெற்றுள்ளேன். இது சிறப்பாகச் சொல்லப்பட்ட நல்ல கதை என்று நம்புகிறேன். யார் நடிக்கிறார்கள், இயக்குகிறார் என்பது இன்னும் முடிவாகவில்லை” என்று தெரிவித்துள்ளார். கடந்த சில வருடங்களாகத் தென்னிந்திய படங்களை இந்தியில் ரீமேக் செய்து வந்தனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திப் படம் ஒன்றும் தமிழில் ரீமேக் ஆக இருக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in