அரசியலில் உதயநிதி இன்னும் மேலே வருவார்: சபரீசன்

அரசியலில் உதயநிதி இன்னும் மேலே வருவார்: சபரீசன்
Updated on
1 min read

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள ‘மாமன்னன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வரின் மருமகன் சபரீசன், “உதயநிதியின் கடைசிப் படம் இதுதான். நடிப்பை விடுவதால் முதலில் அவருக்கு வருத்தம் இருந்தது. இதைவிட முக்கிய பொறுப்பு இருப்பதால் இப்போது வருத்தமில்லை. அரசியலில் அவர் இன்னும் உயரத்துக்கு வருவார். நான் இதன் படப்பிடிப்புக்குச் சென்றிருந்தேன். உதயநிதி நன்றாக நடித்திருக்கிறார். படத்தைப் பார்க்கவில்லை. படம் வெற்றிபெற வாழ்த்துகள்” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in