பாலகிருஷ்ணா படத்தில் இருந்து நயன்தாரா நீக்கம்?

பாலகிருஷ்ணா படத்தில்  இருந்து  நயன்தாரா  நீக்கம்?
Updated on
1 min read

பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘அகண்டா 2’ மெகா பட்​ஜெட்​டில் உரு​வாகி எதிர்​பார்த்த வெற்​றியை பெற​வில்​லை. இதையடுத்து பால​கிருஷ்ணா​வின் 111-வது படத்தை கோபிசந்த் மலினேனி இயக்​கு​கிறார். இரு​வரும் ஏற்​கெனவே ‘வீரசிம்ஹா ரெட்​டி’ படத்​தில் இணைந்​திருந்​தனர்.

வரலாற்​றுப் பின்​னணி​யில் உரு​வாகும் இப்​படத்​தில் பால​கிருஷ்ணா 2 வேடங்​களில் நடிக்​கிறார். அதில் ஒரு வேடம், அரசர் என்று கூறப்​பட்​டது. இதில், நயன்​தாரா மகா​ராணி​யாக நடிக்க ஒப்​பந்​த​மா​னார். அவருடைய முதல் தோற்​றம் வெளி​யாகி வரவேற்​பைப் பெற்​றது. ‘சிம்​ஹா’, ‘ஜெய் சிம்​ஹா’, ‘ ராம ராஜ்ஜி​யம்’ ஆகிய படங்​களுக்​குப் பிறகு இதில் இரு​வரும் மீண்​டும் இணைந்து நடிக்​கின்​றனர்.

இந்​தப் படத்தை முதலில் ரூ.150 கோடி பட்​ஜெட்​டில் உரு​வாக்​கத் திட்டமிட்​டனர். ‘அகண்டா 2’ எதிர்​பார்த்த வசூலை பெறாத​தால், பட்​ஜெட்டை குறைத்​து​விட்​ட​தாக​வும் இதனால், ரூ.10 கோடி சம்​பளம் வாங்​கிய நயன்தாரா மாற்​றப்​பட்​டு, அவருக்​குப் பதிலாக வேறு நடிகையை நாயகி​யாக ஒப்​பந்​தம் செய்ய திட்​ட​மிட்​டுள்​ள​தாகச் செய்​தி​கள் வெளி​யா​யின.

இந்​நிலை​யில் “அது வதந்​தி​தான், படத்​தின் கதை தற்​போதைய மார்க்​கெட் நில​வரப்​படி மாற்​றியமைக்​கப்​பட்​டுள்​ளது. ஆனால், நயன்​தாரா படத்​தில் இருந்து நீக்​கப்​பட​வில்​லை” என்​று படக்குழு தரப்பில் கூறப்​படுகிறது.

பாலகிருஷ்ணா படத்தில்  இருந்து  நயன்தாரா  நீக்கம்?
‘திரவுபதி 2’-வில் சின்மயி பாடிய பாடல் நீக்கம்: இயக்குநர் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in