பிரபாஸுக்கு வில்லனாகிறார் இந்தி நடிகர் விவேக் ஓபராய்

பிரபாஸுக்கு வில்லனாகிறார் இந்தி நடிகர் விவேக் ஓபராய்
Updated on
1 min read

‘அனிமல்​’படத்​துக்​குப் பிறகு, பிர​பாஸ் ஹீரோ​வாக நடிக்​கும் ‘ஸ்​பிரிட்’ படத்தை இயக்​கு​கிறார், சந்​தீப் ரெட்டி வங்​கா. இதில் த்ரிப்தி திம்ரி நாயகி​யாக நடிக்​கிறார். தென் கொரிய நடிகர், மா டாங்க் சியோக், பிர​காஷ் ராஜ், காஞ்​சனா உள்பட பலர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடிக்​கின்​றனர்.

பிர​பாஸின் 25-வது படமான இது காவல்​துறை அதி​காரியைப் பற்​றிய கதை என கூறப்​படு​கிறது. தெலுங்​கு, தமிழ், இந்​தி, கொரியா உள்பட 8 மொழிகளில் உரு​வாகும் இப்​படத்​தின் தொடக்க விழா ஹைத​ரா​பாத்​தில் சில மாதங்​களுக்கு முன் நடை​பெற்​றது.

இதில் நெகட்​டிவ் கதா​பாத்​திரத்​தில் பிரபல இந்தி நடிகர் விவேக் ஓபராய் நடிக்க இருக்​கிறார். சந்​தீப் ரெட்டி வங்கா இயக்​கிய ‘அனிமல்' படத்​தில் இந்தி நடிகர் பாபி தியோல் வில்​ல​னாக நடித்​திருந்​தார். அதில் அவருடைய கேரக்​டரும் பேசப்​பட்டது.

இந்​நிலை​யில் இதில் விவேக் ஓபராய் வில்​ல​னாக நடிக்​கிறார். அவர் இது​வரை தோன்​றாத லுக்கில் வர இருப்​ப​தாகப் படக்​குழு தெரி​வித்​துள்​ளது. விவேக் ஓபராய் தமிழில், அஜித்​தின் ‘விவேகம்’ படத்​தி​லும் நெகட்​டிவ் கதா​பாத்​திரத்​தில் நடித்திருந்​தார்​.

பிரபாஸுக்கு வில்லனாகிறார் இந்தி நடிகர் விவேக் ஓபராய்
‘பராசக்தி’ படம் கிடைக்க பராசக்தி அருளே காரணம் - சிவகார்த்திகேயன் பூரிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in