விஜய் சேதுபதி – பூரி ஜெகந்நாத் இணையும் ‘ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

விஜய் சேதுபதி – பூரி ஜெகந்நாத் இணையும் ‘ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
Updated on
1 min read

பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படத்துக்கு ‘ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு’ எனத் தலைப்பிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

இன்று விஜய் சேதுபதி தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள், தயாரிப்பாளர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே, பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இதன் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

இப்படத்துக்கு ‘ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு’ என தலைப்பிட்டுள்ளது படக்குழு. முழுக்க ஆக்‌ஷன் கலந்த கதையாக உருவாகியுள்ள இப்படத்தினை பூரி கனெக்ட்ஸ் மற்றும் ஜே.பி மோஷன் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர். ’ஸ்லம் டாக்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்திற்கு ’33 டெம்பிள் ரோடு’ என்ற டேக்லைன் வழங்கப்பட்டுள்ளது.

இதில் விஜய் சேதுபதி உடன் சம்யுக்தா, தபு, துனியா விஜய்குமார், பிரம்மாஜி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதற்கு இசையமைப்பாளராக ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் பணிபுரிந்து வருகிறார். இப்படத்தினை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் பிரம்மாண்டமாக வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.

விஜய் சேதுபதி – பூரி ஜெகந்நாத் இணையும் ‘ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
‘வா வாத்தியார்’ விமர்சனம்: கார்த்தி - நலன் குமாரசாமி காம்போ கலக்கலா, சறுக்கலா?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in