

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம் பிப்ரவரி 26-ம் தேதி நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா இருவரும் காதலித்து வருகிறார்கள். இதனை மறைமுகமாக பலமுறை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் ஹைதராபாத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் இரு வீட்டாரும் கலந்துக் கொண்ட திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமணம் எப்போது என்பது தெரியாமல் இருந்தது.
தற்போது, விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம் உதய்பூரில் உள்ள அரண்மனை ஒன்றில் பிப்ரவரி 26-ம் தேதி நடைபெறவுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இதனை இருவரும் உறுதிப்படுத்தவில்லை. விஜய் தேவரகொண்டா நடிக்கவுள்ள புதிய படமொன்றின் நாயகியாக ராஷ்மிகா ஒப்பந்தமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்துக்கு பின்பும் ராஷ்மிகா தொடர்ந்து நடிக்க முடிவு செய்திருக்கிறார்.
’கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ படத்தில் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா இருவரும் இணைந்து நடித்துள்ளனர். அதன் மூலமே இருவருக்கும் நட்பு ஏற்பட்டு அது காதலாக மாறியது. இருவரும் நீண்ட வருடங்களாக காதலித்து வருவது குறிப்பிடத்தக்கது.