

பிரான்சில் நடைபெற்ற அனிமேஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குநர் ராஜமவுலி, அங்கு பேசும்போது, 'வாரணாசி' படம் பற் றிய அப்டேட்டை கொடுத்துள்ளார். "படத்தின் பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகள் அனைத்தும் எடுத்து முடிக்கப்பட்டுவிட்டது. கதையை இணைக்கும் காட்சிகள் மட்டுமே பாக்கி உள்ளது, இன்னும் 80 நாட்களில் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடையும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இப்படத்தில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அடுத்த ஆண்டு ஏப். 7-ல் வெளியாக இருக்கிறது.