

யாஷ் நடித்துள்ள 'டாக்ஸிக்' படத்தில் இருந்து 'லேடீஸ் அண்ட் லேடீஸ்' என்ற நாயகிகளின் அறிமுக டீஸரை படக்குழு வெளியிட்டுள்ளது.
கீது மோகன்தாஸ் இயக் கியுள்ள இப்படத்தில் நடித்துள்ள நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ஹுமா குரேஷி, ருக்மணி வசந்த் ஆகியோர் டீஸரில் இடம்பெற்றுள்ளனர்.
இதில் நயன்தாரா பைக் ஓட்டுவது போன்றும், கியாரா நடனக் கலைஞராகவும் காட்டப்படுகிறது. ருக்மிணி, தாரா, ஹுமா ஆகியோர் சதித் திட்டம் தீட்டுவது போலவும் வருகின்றனர். இந்த டீஸர் வரவேற்பைப் பெற்றுள்ளது.