1950-களில் நடக்​கும் கதை​யில் டொவினோ தாமஸ், கயாது லோஹர்

1950-களில் நடக்​கும் கதை​யில் டொவினோ தாமஸ், கயாது லோஹர்
Updated on
1 min read

டொவினோ தாமஸ், கயாது லோஹர் இணைந்து நடிக்​கும் படத்​துக்கு ‘பள்​ளிச்​சட்​டம்​பி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் விஜய​ராகவன், சுதீர் கரமண, பாபுராஜ், வினோத் கெடமங்​கலம் உள்​ளிட்ட பலர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடிக்​கின்​றனர். டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்​கி​யுள்ள இந்​தப் படத்​துக்கு டிஜோ டோமி ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். ஜேக்ஸ் பிஜாய் இசை அமைத்துள்​ளார். 1950–60 கால​கட்​டத்தை அடிப்படையாகக்கொண்டு இப்​படத்​தின் கதை அமைக்கப்​பட்​டுள்​ளது.

வேர்ல்ட்​வைட் ஃபிலிம்ஸ் சார்​பில் நவுஃபல் மற்​றும் பிரிஜீஷ், சி க்யூப் ப்ரோஸ் என்​டர்​டெ​யின்​மென்ட்ஸ் சார்பில் சாணக்​கியா சைதன்யா சரண் ஆகியோர் தயாரிக்​கின்​றனர். இதில் டெவினோ தாமஸ் முற்​றி​லும் புதிய தோற்​றத்​தில் நடிக்​கிறார். மலை​யாளத்​தில் உருவாகும் இப்​படம் தமிழ், தெலுங்​கு, இந்​தி, கன்​னடம் என 5 மொழிகளில் வெளி​யிடப்பட இருக்​கிறது. இப்படம் ஏப். 9-ல் வெளி​யாக உள்​ளது.

1950-களில் நடக்​கும் கதை​யில் டொவினோ தாமஸ், கயாது லோஹர்
பிரதமர் மோடி வருகையை எதிர்த்து கருப்பு கொடி​ போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in