அட்லி படத்தில் டைகர் ஷெராஃப்?

அட்லி படத்தில் டைகர் ஷெராஃப்?
Updated on
1 min read

அல்லு அர்​ஜுன் ஹீரோ​வாக நடிக்​கும் சயின்ஸ் பிக் ஷன் திரைப்​படத்தை இயக்கி வரு​கிறார், அட்லி. இதை சன் பிக்​சர்ஸ் பிரம்​மாண்ட பட்​ஜெட்​டில் தயாரிக்​கிறது. தீபிகா படு​கோன் நாயகி​யாக நடிக்​கிறார். ஜான்வி கபூர், மிருணாள் தாக்​குர், ராஷ்மிகா மந்​தனா ஆகியோ​ரும் நாயகி​களாக நடிக்க இருக்​கின்​றனர்.

இதில் அல்லு அர்​ஜுன் 4 வேடங்​களில் நடிக்க இருப்​ப​தாகச் செய்​தி​கள் வெளி​யாகி இருந்​தன. “சர்​வ​தேச தரத்​துடன் இந்​தி​யா​வில் தயா​ராகும் ‘பான் வேர்ல்ட்’ படமாக இது இருக்​கும். இந்​திய சினி​மா​வில் இது​வரை இல்​லாத அளவில், இந்​தப் படம் தயா​ராகிறது” என படக் குழு​வினர் ஏற்​கெனவே தெரி​வித்​திருந்​தனர்.

இந்​நிலை​யில் இந்​தப்​படம் 2 பாகங்​களாக உரு​வாக இருக்​கிறது என்​கிறார்கள். இதில் இப்​போது பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் இணை​கிறார். அவர், பிளாஷ்பேக் காட்​சி​யில், முக்​கிய வேடத்​தில் நடிக்க இருப்பதாகக் கூறப்​படு​கிறது. இதுகுறித்து படக்​குழு இன்​னும் அதி​காரப்​பூர்​வ​மாக அறிவிக்​க​வில்​லை.

அட்லி படத்தில் டைகர் ஷெராஃப்?
‘ஜனநாயகன்’ ரிலீஸில் சிக்கல்: தணிக்கை வழக்கில் உயர் நீதிமன்ற தீர்ப்பு எப்போது?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in