ஓடிடியில் பிப்.6-ல் ‘தி ராஜாசாப்’ ரிலீஸ்!

ஓடிடியில் பிப்.6-ல் ‘தி ராஜாசாப்’ ரிலீஸ்!
Updated on
1 min read

பிப்ரவரி 6-ம் தேதி ஓடிடி தளத்தில் ‘தி ராஜாசாப்’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2026-ம் ஆண்டு தொடக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான படம் ‘தி ராஜாசாப்’. மாருதி இயக்கத்தில் பிரபாஸ், சஞ்சய் தத், மாளவிகா மோகனன், நிதி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் கடும் விமர்சனங்களை சந்தித்து பெரும் தோல்வியை தழுவியது. இதனை தயாரித்த பீப்பிள் மீடியா பேக்டரி நிறுவனத்துக்கும் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.

தற்போது பிப்ரவரி 6-ம் தேதி முதல் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ‘தி ராஜாசாப்’ வெளியாகவுள்ளது. திரையரங்கிலேயே கடும் விமர்சனத்தை சந்தித்ததால், ஓடிடியில் அதனை விட அதிகமாக விமர்சனத்தை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் தோல்விக்குப் பிறகு எந்தவொரு படக்குழுவினருமே பேசவில்லை. ஏனென்றால் பட வெளியீட்டுக்கு முன்பு தன் வீட்டின் முகவரியை எல்லாம் இயக்குநர் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

‘தி ராஜா சாப்’ படத்தினைத் தொடர்ந்து, சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் உருவாகும் ‘ஸ்பிரிட்’ படத்தினை தொடங்கியுள்ளார் பிரபாஸ். அவருடைய நடிப்பில் அடுத்த வெளியீடாக ‘ஃபெளசி’, ‘கல்கி 2’ மற்றும் ‘ஸ்பிரிட்’ தயாராகி வருகிறது. இதில் எது முதலில் வெளியாகும் என்பது இன்னும் முடிவாகவில்லை.

ஓடிடியில் பிப்.6-ல் ‘தி ராஜாசாப்’ ரிலீஸ்!
தனுஷுக்கு நாயகியாக ஸ்ரீலீலா ஒப்பந்தம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in