சமூக ஊடகங்களில் அவதூறு - ‘தி ராஜா சாப்’ தயாரிப்பாளர் சைபர் கிரைமில் புகார்

சமூக ஊடகங்களில் அவதூறு - ‘தி ராஜா சாப்’ தயாரிப்பாளர் சைபர் கிரைமில் புகார்
Updated on
1 min read

பிரபாஸ் நடித்த ‘த ராஜா சாப்’ திரைப்படம், தெலுங்கு, தமிழ், இந்தியில் கடந்த 9-ம் தேதி வெளியானது. இதில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார் என பலர் நடித்துள்ளனர். தமன் இசை அமைத்திருந்தார்.

இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. சமூக வலைதளங்களில் இப்படத்தை சிலர் கடுமையாக விமர்சித்திருந்தனர். இதன் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரையும் அவதூறாக ட்ரோல் செய்திருந்தனர். இந்நிலையில் இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ் குமார், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதில், தனது பெயரில் சிலர் போலியான பதிவுகளை வெளியிடுவதாகவும் ஹீரோக்கள் மற்றும் நடிகர்களை இழிவுபடுத்தும் வகையிலான பதிவுகள் தனது பெயரில் வெளியிடப்படுவதாகவும் கூறியுள்ளார். இதுபோன்ற செயல்கள் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் தவறான பதிவுகளை வெளியிடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் அவதூறு - ‘தி ராஜா சாப்’ தயாரிப்பாளர் சைபர் கிரைமில் புகார்
“100 தொகுதிகளில் தனித்து போட்டி” - பேராயர் ஆ.சாம் ஏசுதாஸ் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in