‘த பாரடைஸ்’ டீசர் எப்படி? - நானியின் வித்தியாச தோற்றம்!

‘த பாரடைஸ்’ டீசர் எப்படி? - நானியின் வித்தியாச தோற்றம்!
Updated on
1 min read

நானியின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘த பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

நானி – ஸ்ரீகாந்த் ஒடெலா இணைப்பில் வெளியான ‘தசரா’ படம் அமோக வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்தக் கூட்டணி  மீண்டும்  ‘த பாரடைஸ்’ படத்தில் இணைந்து. இந்தப் படத்தின் டீசர் இன்று வெளியானது. 1.42 நிமிடங்கள் ஓடும்  டீசரில் உணர்வுப்பூரவமான காட்சிகள், அதிரடி காட்சிகள், நானி - ராகவ் ஜுயல் மோதல்,   படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்கின்றன.

நானியின் வித்தியாசமான தோற்றம் இதுவரை பார்க்காத நானியை இந்த முறை  திரையில் பார்க்கலாம் என்று சொல்கின்றன. சி.ஹெச். சாய் ஒளிப்பதிவு, அனிருத்தின் அதிரடி இசை ஸ்ரீகாந்த் ஒடெலாவின் அதிரடி கதை மீது மேலும் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன.

எஸ்.எல்.வி சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்தில் நானியுடன்  ராகவ் ஜுயல், மோகன் பாபு, காயடு லோஹர்,  சோனாலி குல்கர்னி நடித்துள்ளனர். 

தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், பெங்காலி, ஆங்கிலம், ஸ்பானிஷ் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக இருக்கும் இந்தப் படம் செப்.24-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

‘த பாரடைஸ்’ டீசர் எப்படி? - நானியின் வித்தியாச தோற்றம்!
ரியோ ராஜின் ‘ராம் IN லீலா’ ஆக.21-ல் ரிலீஸ்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in