

நிவின் பாலி, மமிதா பைஜூ, சங்கீத் பிரதாப், ரோஷன் ஷா நவாஸ், ஷியாம் மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம், ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’. மலையாளத்தில் வெற்றி பெற்ற இப்படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு நேற்று வெளியானது. கிரிஷ் ஏடி இயக்கியுள்ள இந்தப்படத்தைத் தமிழில் ப்ரீமார்க் புரொடக் ஷன் மற்றும் பியூச்சர் ரன்னர் அப் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்கியுள்ளன.
சென்னையில் நடந்த இதன் புரமோஷன் நிகழ்ச்சியில், ஃபஹத் பாசில் பேசும்போது, “இந்தப் படம் மிகவும் சிறப்பானது. நான்- தினேஷ்- ஷியாம் ஆகிய மூவரும் இணைந்து தயாரித்துள்ளோம். எங்கள் மனதுக்கு நெருக்கமான கதைகளைத் தேர்வு செய்து தொடர்ந்து படங்களைத் தயாரிக்க உள்ளோம்.
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் கொண்டாடும் வகையில் இருக்கும். தமிழ் மற்றும் தமிழ் சினிமா எனக்கு ஸ்பெஷலானது. என் தந்தை பாசில் இங்கே பணிபுரிந்துள்ளார். அடுத்து ‘96’ பிரேம்குமார் இயக்கும் படத்தில் நடிக்கிறேன். அது டிசம்பரில் வெளியாகும்” என்றார்.