

பிரம்மாண்ட வெற்றி பெற்ற ‘மஞ்சும்மள் பாய்ஸ்’ படம் மூலம் மற்ற மொழிகளிலும் பிரபலமானவர், மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி. இவர் தமிழிலும் நடித்து வருகிறார். இவர் தற்போது நடித்துள்ள ‘அவரச்சன் அண்ட் சன்ஸ்’என்ற மலையாளப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது தனது மனைவி ரீது சக்காரியாவைப் பிரிந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இருவரும் கடந்த 2016-ம் ஆண்டு காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். கருத்துவேறுபாடு காரணமாகக் கடந்த 2024-ம் ஆண்டு தனித்தனியாக வாழத் தொடங்கியதாகவும் தற்போது சட்டரீதியாக விவாகரத்து பெற்றுவிட்டதாகவும் ஸ்ரீநாத் பாசி தெரிவித்துள்ளார். தற்போது பெற்றோருடன் வசித்து வரும் அவர் விவாகரத்துக்கான காரணத்தைத் தெரிவிக்கவில்லை.