‘மண்டாடி’ முதல் ‘சர்தார் 2’ வரை: செப்டம்பர் ரிலீஸ் அணிவகுப்பு

‘மண்டாடி’ முதல் ‘சர்தார் 2’ வரை: செப்டம்பர் ரிலீஸ் அணிவகுப்பு
Updated on
2 min read

சூரியின் மண்டாடி முதல் கார்த்தியின் ‘சர்தார் 2’ வரை செப்டம்பர் மாதம் திரைக்கு வரக் காத்திருக்கும் தென்னிந்திய மொழித் திரைப்படங்களின் பட்டியல் இது.

ஐ அம் கேம்: நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் துல்கர் சல்மான் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘ஐ அம் கேம்’. இந்தப் படத்தில் அவருடன், கயாது லோஹர், ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், சம்​யுக்தா விஸ்​வ​நாதன் உள்​ளிட்ட பலர் முக்​கிய கதாபாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர். ஆக்‌ஷன் த்ரில்லர் வகையைச் சேர்ந்த இந்த மலையாளப் படம் செப்டம்பர் 3-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

பாரடைஸ்: ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி, கயாது லோஹர், ராகவ் ஜுயல், மோகன் பாபு, தனிகெல்லா பரணி, சோனாலி குல்கர்னி, சம்பூர்ணேஷ் பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தில், கீர்த்தி சுரேஷ் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த ஆக்‌ஷன் த்ரில்லர் தெலுங்கு படம் செப்டம்பர் 24-ம் தேதி வெளியாகிறது.

டோரதி: இளையராஜா இசையில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘டோரதி’ படத்தில் கீர்த்தி சுரேஷ், சானந்த், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தத் தமிழ்படம்  செப்டம்பர் 25-ம் தேதி திரைக்கு வருகிறது.

மண்டாடி: சூரியின் நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கும் ‘மண்டாடி’ படத்தில் சுஹாஸ், மகிமா நம்பியார், கிரிஷ் ஹாஸ்ஸன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கடலோர மக்களின் வீரத்தையும் வாழ்க்கைப் போராட்டத்தையும் சொல்லும் இந்தத் தமிழ் படம் செப்டம்பர் 10-ம் தேதி வெளியாகிறது.

மீசைய முறுக்கு 2:  ஹிப்- ஹாப் தமிழா ஆதி இயக்கி நடித்திருக்கும் இந்தப் படத்தில் சைத்ரா ஆச்​சர், கேதிகா ஷர்​மா, ரம்யா ரங்​க​நாதன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தத் தமிழ் படம் செப்டம்பர் 25-ம் தேதி வெளியாகிறது.

டிமாண்டி காலனி 3: அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், மீனாக்ஷி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடத்திருக்கும் இந்த திகில் த்ரில்லர்  தமிழ் படம் செப்டம்பர் 10-ம் தேதி வெளியாகிறது.

சர்தார் 2: பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் ‘சர்தார்’ படத்தின் இரண்டாவது பாகமாக வரும் இந்த ஆக் ஷன் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த தமிழ் படம் செப்டம்பர் 10-ம் தேதி வெளியாகிறது.

‘மண்டாடி’ முதல் ‘சர்தார் 2’ வரை: செப்டம்பர் ரிலீஸ் அணிவகுப்பு
யுவன் இசையில் ‘ராஜாஸ் ப்ளேலிஸ்ட்’ முதல் சிங்கிள் எப்படி?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in