பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியாக நடிக்கிறார் சாய் பல்லவி

பாடகி  எம்.எஸ்.சுப்புலட்சுமியாக நடிக்கிறார் சாய் பல்லவி
Updated on
1 min read

பிரபல கர்​னாடக இசைப்​பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி​யின் வாழ்க்கை கதை திரைப்​பட​மாக இருக்​கிறது. எம்.எஸ்.சுப்புலட்சுமி வேடத்​தில் வித்யா பாலன் நடிக்க இருப்​ப​தாக சில வருடங்​களுக்கு முன் கூறப்​பட்​டது. பிறகு அதுபற்​றிய தகவல் இல்​லை.

இந்​நிலை​யில் அவருடைய பயோபிக்​கை பெங்​களூரைச் சேர்ந்த நிறு​வனம் ஒன்று தயாரிக்​கிறது. படத்​துக்​கான முன் தயாரிப்பு பணி​கள் ஏற்​கெனவே தொடங்​கி​விட்​ட​தாகச் செய்​தி​கள் வெளி​யான நிலை​யில், எம்​.எஸ்​.சுப்​புலட்​சுமி​யாக த்ரிஷா, நயன்​தா​ரா, ராஷ்மிகா மந்​தனா ஆகியோரில் ஒரு​வரின் பெயர் பரிசீலனை​யில் இருப்​ப​தாகக் கூறப்​பட்​டது.

இந்​நிலை​யில் அவர்​கள் யாரும் இல்​லாமல் நடிகை சாய் பல்​ல​வி, எம்​.எஸ்​.சுப்​புலட்​சுமி​யாக நடிக்க இருக்​கிறார் என்​கிறார்​கள். இந்த கதா​பாத்​திரத்​துக்​காக அவர், கர்​னாடக இசையை கற்று வரு​கிறார். இப்​படத்​தைத் தெலுங்​கில் ஜெர்​ஸி, கிங்​டம் படங்​களை இயக்​கிய கவுதம் தின்​னனுரி இயக்​கு​கிறார்.

பாடகி  எம்.எஸ்.சுப்புலட்சுமியாக நடிக்கிறார் சாய் பல்லவி
‘மை லார்ட்’ விமர்சனம்: ராஜுமுருகன் பேசிய வர்க்க அரசியல் எப்படி?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in