திருமண ஆசை காட்டி ரூ.9 கோடி மோசடி செய்​த​தாக தெலுங்கு நடிகை மீது வழக்கு

நடிகை ஆஷு ரெட்டி

நடிகை ஆஷு ரெட்டி

Updated on
1 min read

திருமண ஆசை காட்​டி, ரூ.9.35 கோடி மோசடி செய்​த​தாக தெலுங்கு நடிகை ஆஷு ரெட்டி மீது போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர்.

இது குறித்​து, ஹைத​ரா​பாத் ஷேக்​பேட்​டையை சேர்ந்த சத்​ய​நா​ராயண மூர்த்தி என்​பவர் அளித்​துள்ள புகாரில், “எனது மகன் தர்மேந்​திரா லண்​டனில் மென்​பொறி​யாள​ராக இருக்​கிறார். அவருக்கு ஆஷு ரெட்​டி, 2018ம் ஆண்டு பழக்​கமா​னார்.

திருமண ஆசை காட்​டிய அவர், தர்​மேந்​தி​ரா​விடம் இருந்து ஐந்து கிலோ தங்கம், சொகுசு கார்​கள் மற்​றும் ரூ.1.80 கோடி மதிப்​புள்ள அடுக்கு​மாடிக் குடி​யிருப்பு ஒன்​றைத் தனது பெயரில் எழுதி வாங்கி​னார். இதன் மொத்த மதிப்பு ரூ.9.35 கோடி. ஆஷு ரெட்டியின் சகோ​தரி​யும் ரூ.50 லட்​சம் பெற்​றுள்​ளார். இவற்​றைப் பெற்​றுக்​கொண்டு திரு​மணம் செய்​து​கொள்ள மறுத்​து​விட்​டார்.

இதைத் தொடர்ந்​து, ஆஷு ரெட்​டி​யிடம் பணத்​தைத் திருப்​பிக் கொடுக்​கு​மாறும், திரு​மணத்​தின் பெயரில் கொடுக்​கப்​பட்ட தங்கத்​தைத் திருப்​பித் தரு​மாறும் கேட்​ட​போது மறுத்​து​விட்​டார்” என்று தெரி​வித்​துள்​ளார்.

இது குறித்து ஹைத​ரா​பாத் பொருளா​தா​ரக் குற்​றப் பிரிவு போலீஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரித்து வரு​கின்​றனர். இதற்​கிடையே இக்​குற்​றச்​சாட்​டு​களை மறுத்​துள்ள ஆஷு ரெட்​டி, தவறான தகவல்​களைப் பரப்​பி​னால் கடுமை​யான சட்ட நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று தெரி​வித்​துள்​ளார்.

<div class="paragraphs"><p><em>நடிகை ஆஷு ரெட்டி</em></p></div>
Bulbbul: பலீவனப்படுத்தும் சமூகத்தைப் பந்தாடும் புல்புல் | திரை தேவதைகள் 15

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in