திருமணத்துக்குப் பிறகு படப்பிடிப்பில் ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா

திருமணத்துக்குப் பிறகு படப்பிடிப்பில் ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா
Updated on
1 min read

நடிகை ராஷ்மிகா மந்​தனா - விஜய் தேவர​கொண்டா திரு​மணம் கடந்த பிப். 26-ம் தேதி ராஜஸ்​தான் மாநிலம் உதய்​பூரில் பிர​மாண்​ட​மாக நடந்​தது. வரவேற்பு நிகழ்ச்சி ஹைத​ரா​பாத்​தில் நடைபெற்றது. திரை​யுல​கினர் திரண்டு வந்து வாழ்த்​தினர். பின்​னர் விருந்​துகளில் பங்​கேற்​றனர்.

திருமண கொண்​டாட்​டங்​களுக்​குப் பிறகு இப்​போது படப்​பிடிப்​பில் இணைந்​துள்​ளனர். திரு​மணத்​துக்​குப் பிறகு அவர் முதன் முதலாகப் படப்​பிடிப்​புக்கு வந்​த​தால், படக்​குழு​வினர் கேக் வெட்டி அவர்​களை வரவேற்​றனர்.

தெலுங்​கில் வெளி​யான ‘கீத கோவிந்​தம்’, ‘டியர் காம்​ரேட்’ படங்​களுக்​குப் பிறகு இரு​வரும் ஜோடி​யாக நடிக்​கும் திரைப்​படம், ‘ரண​பாலி’. இதை ராகுல் சங்​கிருத்​யன் இயக்​கு​கிறார். மைத்ரி மூவி மேக்​கர்ஸ் தயாரிக்​கும் இப்​படம்,

1850-களில் நடந்த உண்மை சம்​பவங்​களை அடிப்​படை​யாகக் கொண்​டது. இப்​படத்​தில் இருந்து வெளி​யான ராஷ்மி​கா, விஜய் தேவர​கொண்டா தோற்​றம் ஏற்​கெனவே வரவேற்​பைப்​ பெற்​றது.

திருமணத்துக்குப் பிறகு படப்பிடிப்பில் ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா
கால்பந்தில் பச்சையப்பன் எஃப்சி வெற்றி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in