ஆக்‌ஷன் காட்சிக்காக 20 மணி நேரம் தண்ணீருக்கடியில் இருந்த ராஷ்மிகா

ஆக்‌ஷன் காட்சிக்காக 20 மணி நேரம் தண்ணீருக்கடியில் இருந்த ராஷ்மிகா
Updated on
1 min read

நாயகிக்கு முக்​கி​யத்​து​வம் கொண்ட ‘மைசா’ என்ற படத்​தில் நடித்து வரு​கிறார் ராஷ்மிகா மந்​த​னா. இதில் ஈஸ்​வரி ராவ், குரு சோமசுந்​தரம், ராவ் ரமேஷ் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடிக்​கின்​றனர். அறி​முக இயக்​குநர் ரவீந்​திர புள்ளே இயக்​கும் இப்​படம் தெலுங்​கு, தமிழ், இந்தி உள்பட பல்​வேறு மொழிகளில் வெளி​யாக இருக்​கிறது.

கோண்ட் பழங்​குடி​யினரின் சுவாரஸி​ய​மான உலகத்தை மைய​மாகக் கொண்ட ஆக் ஷன் த்ரில்​லர் படமான இதில், ராஷ்மி​கா​வின் தோற்​றம் எதிர்​பார்ப்பை ஏற்​படுத்தி இருந்​தது. இப்​படத்​துக்​காக, சாகச நுட்​பங்​கள் கொண்ட ஆக் ஷன் காட்​சிக்​கான பயிற்​சி​யை, ராஷ்மிகா மந்​தனா தாய்​லாந்​தில் மேற்​கொண்​டார். அதன் படப்​பிடிப்பு அங்கு நடை​பெற்​றது.

இந்​நிலை​யில், இப்​படத்​துக்​காக நீருக்​கடி​யில் நடக்​கும் ஆக் ஷன் காட்​சி​யைப் படமாக்​கி​யுள்​ளனர். 2 நாட்​களாக எடுக்​கப்​பட்ட இந்த சண்​டைக் காட்​சிக்​காக, சுமார் 20 மணி நேரம் நீருக்​குள் ராஷ்மிகா இருந்​தார். டூப் இல்​லாமல் அவரே நடித்​தார் என்​றும் இந்​தக் காட்​சிக்​காக அவர் சிறப்​புப் பயிற்சி எடுத்​த​தாக​வும்​ படக்​குழு தெரி​வித்​துள்​ளது.

ஆக்‌ஷன் காட்சிக்காக 20 மணி நேரம் தண்ணீருக்கடியில் இருந்த ராஷ்மிகா
ஜூலை 24-ல் ‘ஜனநாயகன்’ ரிலீஸ்?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in