​வாரணாசி முதல் ரோம் வரை! - ராஜமவுலி புது தகவல்

​வாரணாசி முதல் ரோம் வரை! - ராஜமவுலி புது தகவல்
Updated on
1 min read

ராஜமவுலி இயக்​கத்​தில் பிரம்​மாண்​ட​மாக உரு​வாகும் திரைப்​படம், ‘வாரணாசி’. இதில் மகேஷ் பாபு ‘ருத்​ரா’ என்ற சிவ பக்​த​ராக நடிக்​கிறார். இது காலத்​தைக் கடந்து பயணிக்​கும் சாகசத் திரைப்​படம். இதில் பிரி​யங்கா சோப்​ரா, மந்​தாகினி என்ற கதா​பாத்​திரத்​தி​லும் பிருத்​வி​ராஜ், கும்பா என்ற கதா​பாத்​திரத்​தி​லும் நடிக்​கின்​றனர்.

இப்​படம் பற்றி சமீபத்​தில் ராஜமவுலி கூறும்​போது, ‘‘வாரணாசி காலத்​தைக் கடந்து பயணிக்​கும் கதையைக் கொண்​டுள்ளது. இதன் கதை வாரணாசி​யில் தொடங்​கி, அண்​டார்​டி​கா, ஆப்​பிரிக்கா மற்​றும் கடந்த காலத்​துக்கு அதாவது ரோமுக்​குச் சென்​று, இறு​தி​யில் வாரணாசிக்கு மீண்​டும் திரும்​பு​கிறது.

சுமார் 80 சதவீதப் படப்​பிடிப்பை முடித்​து​ விட்​டோம்; மீத​முள்ள 20 சதவீதப் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. படப்​பிடிப்​புடன் இணைந்து போஸ்ட் புரொடக் ஷன் பணி​களும் ஒரே நேரத்​தில் நடை​பெற்று வரு​வ​தால் திட்​ட​மிட்​டபடி படம் வெளி​யாகும். ஐமேக்ஸில் உருவாகும் முதல் இந்திய படம் இது’’ என்றார்.

​வாரணாசி முதல் ரோம் வரை! - ராஜமவுலி புது தகவல்
பிரபல வில்லன் நடிகர் பிரதீப் ராவத் புற்றுநோயால் காலமானார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in